Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கிழக்கின் பல பகுதிகளில் வானிலிருந்து வந்த மர்மப்பொருள்! அச்சத்தில் மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் சிலந்தி வலை போன்ற வெள்ளை நிறத்திலான மர்ம பொருள் பரவலாக காணப்படுவதை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளன...


மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் சிலந்தி வலை போன்ற வெள்ளை நிறத்திலான மர்ம பொருள் பரவலாக காணப்படுவதை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வாழைச்சேனை, கிண்ணையடி, கும்புறுமூலை, ஓட்டமாவடி, மீராவோடை, மாஞ்சோலை, உட்பட்ட பல பிரதேசங்களில் இந்த மர்மப்பொருள் காணப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத்திலான பஞ்சு அல்லது சிலந்தி வலை போன்ற மர்ம பொருள் வான்பரப்பில் பறந்து திரிவதையும், சிலரது வீடுகள் மற்றும் மரங்களில் மேல் காணப்படுகின்றமையால் பிரதேச மக்கள் அச்சத்துடன் குறித்த மர்ம பொருளை அவதானித்து வருகின்றனர்.

பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும், இதில் சிறு பூச்சி இனங்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் பார்த்த சிலர் தெரிவிக்கின்றனர்.

No comments

Latest Articles