மேஷம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி அகம் மகிழும் நாள். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உறவி னர்களின் சுபநிகழ்ச்சிகள...
மேஷம்
அத்தியாவசியப் பொருட்களை வாங்கி அகம் மகிழும் நாள். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உறவி னர்களின் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும்.
ரிஷபம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக் கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு.
மிதுனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள். வரவு திருப்தி தரும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயர வழிபிறக்கும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும்.
கடகம்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். சான்றோர்களின் சந்திப்பு உண்டு. வீடு, கட்ட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.
சிம்மம்
மகிழ்ச்சி குறையும் நாள். மாற்றுக் கருத் துடையோர் எண்ணிக்கை அதிகரிக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல் வது நல்லது. நாவில் கவனம் செலுத்தினால் நாணயப் பாதிப்பிலிருந்து தப்பிக்க இயலும்.
கன்னி
தூர தேசப் பயணங்களால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.
துலாம்
உத்யோக மாற்றம் உறுதியாகும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாவதற்கான அறிகுறி தோன்றும். ஆபரணச் சேர்க்கை உண்டு.
விருச்சகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலை பேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முற்படுவீர்கள். தொழில் சிறப்பாக நடைபெறும்.
தனுசு
மக்கட்ச் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மகரம்
இனிமையான நாள். நெருங்கிய உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
கும்பம்
சகோதர வழியில் சகாயம் கிட்டும் நாள். தொழில் முன்னேற்றப்பாதையை நோக் கிச் செல்லும். குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நட்பால் நன்மை கிட்டும்.
மீனம்
இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். இடம், பூமி வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவா கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.



No comments