நீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு அகதிகளில் வடதமிழீழத்தை நோக்கி அழைத்து வரப்படும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, யாழ்ப்பாணத்திற்கும் ...
நீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு அகதிகளில் வடதமிழீழத்தை நோக்கி அழைத்து வரப்படும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, யாழ்ப்பாணத்திற்கும் அழைத்து வரப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். உள்ளூரில் அவர்களிற்கு எதிர்ப்பு நிலவிய நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, அவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
இதையடுத்து, அவர்களை வடதமிழீழத்திற்கு அழைத்து வரும் முயற்சியை ஶ்ரீலங்கா அரசு, ஐ.நா மேற்கொண்டது. இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிங்கள வடக்கு ஆளுனருடன் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அவர்கள் சம்மதித்தபோதும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் இதை எதிர்த்தனர்.
அந்த எதிர்ப்பை மீறி வவுனியாவில் ஒரு தொகுதி அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையிலேயே யாழ்ப்பாணத்திற்கும் அகதிகள் அழைத்து வரப்படுகின்றனர். முதற்கட்டமாக ஒரு குடும்பம் அழைத்து வரப்பட்டு வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணம் காவல்துறை நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர், வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



ليست هناك تعليقات