Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தந்தை பிரேத அறையில் -சகோதரி மணவறையில் -கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அண்ணனின் செயல்!

தந்தை இறந்த தகவலை மறைத்து தனது தங்க‍ைக்கு திருமணத்தை நிறைவேற்றிய அண்ணனின் செயல் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...



தந்தை இறந்த தகவலை மறைத்து தனது தங்க‍ைக்கு திருமணத்தை நிறைவேற்றிய அண்ணனின் செயல் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தமிழ்நாட்டில், திருச்சி மாவட்டம் லால் குடியருகே உள்ள செம்பறை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 67 ) மற்றும் அவரது மனைவி வசந்தா (வயது 51 ), ஆகியோருக்கு 41 வயதில் உதயகுமார் எனும் மகனும், 31 வயதில் கனிமொழி எனும் மகளும் உள்ளனர்.

இந் நிலையில் நன்னிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகனின் மகன் ராஜகுரு என்பவருக்கும் கனிமொழிக்கும் திருமணம் செய்த பெரியோர்கள் முடிவெடுத்திருந்தனர். அதன்படி அவர்களுக்கு மே மாதம் 17 ஆம் திகதி திருமணம் நடத்த நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து லால்குடி, வடக்கு ஐயன் வாய்க்காலுக்கருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை அவர்கள் முன்கூட்டியே பதிவு செய்தனர்.

இந் நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மணமகளின் தந்தை நடராஜனுக்கு திடீரென தலையில் கட்டியொன்று ஏற்பட்டது. இதனால் அவர் திருச்சி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார்.

வைத்தியசாலையில் அவருக்கு துணையாக அவரது மகன் உதயகுமார் தந்தையை பராமரித்து வந்தார். இதேநேரம் தங்கை கனிமொழியின் திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.

இந் நிலையில் கடந்த 16 ஆம் திகதி மு.ப.11.00 மணியளவில் மணமகளின் தந்தையாரான நடராஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

தந்தை இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிந்தால் மறுநாள் மணக்கோலம் காண வேண்டிய தனது தங்கையின் திருமணம் நின்றுவிடும் எனக் கருதிய அண்ணன் உதயகுமார் தந்தை இறந்த கவலையை தனக்குள் வைத்துக்கு கொண்டு, அது குறித்து எவரிடமும் கூறவில்லை.

இது குறித்து வைத்தியர்களிடம் தெரிவித்த அண்ணனான உதயகுமார் தனது தந்தையின் உடலை பிரேத அறையில் வைக்குமாறு தெரிவித்துள்ளார். பின்னர் அவர் தங்கையின் திருமணத்துக்கு செல்லாமல் வழக்கம்போல் வைத்தியசாலையிலேயே தந்தையை பராமரிப்பதாக இருந்துவிட்டார்.

இந் நிலையில் கடந்த 17 ஆம் திகதி முடிவு செய்ததுபோல் தங்கை கனிமொழிக்கும் ராஜகுருவுக்கும் திருமணம் இடம்பெற்றது. வைத்தியசாலையின் பிரேத அறையில் தந்தையின் உடல் இருப்பது தெரியாமல் திருமண மண்டப மணக்கோலத்தில் கனிமொழி அமர்ந்திருந்தார்.

காலை 10.00 மணிக்கு அவர்களது திருமணம் நிறைவடைந்து அனைத்து சமய சம்பிரதாயங்களும் நிறைவடைந்தன. அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நிறைவடைந்ததும், அண்ணான உதயகுமார் உறவினர் ஒருவரின் மூலம் திருமண மண்டபத்தில் உள்ளவர்களுக்கு மணமகளின் தந்தை நடராஜன் இறந்து விட்ட செய்தியை தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியைடைந்த புதுமணப்பெண் அவரது தாய், உறவினர்களுடன் கதறியழுதார்.

திருமண விழாவுக்கு வந்த உறவினர், நண்பர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். இதைத் தொடர்ந்து அனைவரும் வைத்தியசாலைக்கு சென்று நடராஜனின் உடலை ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.

அன்று மாலையே நடராஜனின் இறுதிச் சடங்குகளும் இடம்பெற்றதுடன், இதில் மணக்கோலத்தில் புதுமண தம்பதியினர் கலந்துகொண்டனர்.

தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை அண்ணன் நிகழ்த்தி வைத்த சம்பவம் அக்கிராம மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ليست هناك تعليقات

Latest Articles