Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு; யாழ்ப்பாண மக்களுக்கான முக்கிய செய்தி!

யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு காரணமான சுன்னாகம் நொதேர்ன் பவர் நிறுவனத்தின் உத்துரு ஜனனி மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சி...

யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு காரணமான சுன்னாகம் நொதேர்ன் பவர் நிறுவனத்தின் உத்துரு ஜனனி மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இதன்படி சுன்னாகம் உத்துரு ஜனனி மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றாடலுக்கு தீங்க ஏற்படுவதனால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 20 மில்லியன் ரூபா நட்டயீடு வழங்கப்படவேண்டும் என மேற்படி நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

உத்தரவின் அடிப்படையில், ஒரு குடும்பத்திற்கு உயர்ந்த பட்ச நட்ட ஈடாக 40,000 ரூபா வீதம் பகிர்ந்து வழங்குமாறும் அதனை தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் குழு ஒன்றின் தலைமையில் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்புக்கு வலுச்சேர்த்த மனுவில் உத்துரு ஜனனி மின் உற்பத்தி நிலையத்தினால் வெளியாகும் கழிவுநீர், எண்ணை மற்றும் கிரீஸ் ஆகியவற்றினால் கிணற்று நீர் பாதிக்கப்படுவதாகவும் இதனால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தமை முக்கிய அம்சமாகும்.

ليست هناك تعليقات

Latest Articles