இலங்கையில் செயற்கை மழை பொழிவதற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது. மலையகத்தின் மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் காலை...
மலையகத்தின் மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் காலை 11 மணியளவில் இரசாயணப் பதார்த்தம் இலங்கை விமானப்படையின் Y-12 ரக விமானம் மூலம் தூவப்பட்டது.
இதையடுத்து பகல் 01.00 மணி முதல் 01.45 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் தினங்களிலும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் வான்பரப்பில் செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக இரசாயணப் பதார்த்தம் தூவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.



ليست هناك تعليقات