Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

போதை எனும் பிடியில் இருந்து மீளப் பாடுபடுவோம்!

"ஈதுஞ்சினார் செத்தாரின் வேறல்லார் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பார்டு" என்னும் வள்ளுவ பெருந்தகையின் வாக்கிற்கிணங்க நாம் ...

"ஈதுஞ்சினார் செத்தாரின் வேறல்லார் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பார்டு"
என்னும் வள்ளுவ பெருந்தகையின் வாக்கிற்கிணங்க நாம் தற்போது வாழ்ந்து கொண்டுள்ள இடமானது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தில் பனைமரமென்றாலே ஒரு தனிச்சிறப்பு. இங்குதான் பனைமரம் சார் பல்வேறு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனைவிட இப்போது கசிப்பு எனும் போதைப் பொருள் யாழ்.மண்ணிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலே கூறப்பட்ட திருக்குறளின் பொருளானது கசிப்பு உண்பவர்கள் அறிவு இல்லாததனால் நஞ்சுண்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். 

ஒருசில கோப்பைகள் அருந்தியதுடன் ஒதுங்கி நிற்கும் நபர்கூட இன்னுமொரு கூட்டத்தில் முக் கிய மானவராக மாறிவிடுகின்றார். ஆனால் அந்நபருக்கு இப்போதையானது தலை வலியையும் குமட் டலையும் ஞாபக மறதியையும் கொண்டு வருகின்றது.

எமது உடலில் புளேட்டிவெட்டுகள் எனும் ஓர் பகுதி காணப்படுகிறது. ஒருநபர் சிகரெட் புகைப்பதனால் இப் புளேட்டி வெட்டுக்களில் நிக்கோபின் நஞ்சு பாய்ந்து பெரிய அளவிலான கடுமையான விளைவுகளை உண்டாக்கின்றது. 

இந்த சிகரெட் புகைக்க தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே இது தோன்றிவிடுவதோடு ஒரு மணி நேரம் வரை நீடித்திருக்கிறது. இதனைப் பின்வருமாறு விளக்கலாம், சிகரெட் புகையை உள்ளெழுப்பதனைத் தொடர்ந்து இரத்தத்தில் நிக்கோடீன் கரைசலை பிளெட்டிவெட்டுக்கள் நிறைந்த பிளாஸ்மா சுற்றிச் சூழ்ந்து கொள்கின்றது.

அடுத்து மதுப்பழக்கம் உடையவர்களைப் பார்ப்போம். எமது மூளையில் ஆயிரக்கணக்கான செல்கள் காணப்படுகின்றன. இச் செல்களினாலே நாம் சிந்தித்து செயற்படும் திறன் எம்மிடம் காணப்படுகின்றது.
ஆனால் மதுவினால் மூளையிலுள்ள செல்கள் துரிதமாக அழிகின்றது. 

மேலே கூறிய ஆயிரக்கணக்கான செல்கள் எனப்படுவது ஓர் சிறுபிள்ளையின் மூளையில் உள்ள செல்கள். ஆனால் வளர்ந்த ஒருவரின் மூளையில் கோடிக் கணக்கான செல்களை கொண்டுள்ளது. இச்செல்களை மீள உருவாக்க முடிவதில்லை. எமது உடலில் ஒரு காயம் ஏற்படுமாயிருந்தால் எந்தக் காயம் தோல் களினால் நிரப்பப்பட்டு விடும். ஆனால் ஒருமுறை இழந்த செல்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடி யாது. மேலும் இம் மதுவானது இரத்த நாளங்களில் கலந்து ஓடும்போது மூளையிலுள்ள இரத்தக் குழாய்களிலிருந்து வெளியேற சேதத்தை  ஏற்படுத்துகின்றது.

மதுவினால் இதயத்தில் நச்சுப் பொருட்களை செலுத்துவதனால் இதயத்தசையின் சக்தி கொடுக்கும் பகுதிகள் அழிந்து போகின்றன. இதனால் இத்தகைய நபர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
 உடல் உறுப்புக்களில் மிக முக்கிய உறுப்புக்களான கல்லீரல்  சிறுநீரக மும் மதுவினால் சேதமடை கின்றன. சிறு குடலில் மது கலந்திருக்கும் போது விற்றமின் (ய), அமினோ அமிலங்கள், தயாமின் போன்ற ஊட்டச்சத்துக்களை ஏற்க முடிவதில்லை. 

மூளையின் செல்கள் அழிக்கப்படுவதனால் சிந்தித்து செயற்படும் நிலையை இழந்து தடுமாறி பல குற்றந் செயல்களில் ஈடுபட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். போதைப் பொருள்களின் பாவனயினால் குடும்பங்களிடையே குழப்பநிலை ஏற்பட்டு குழந்தைகளின் கல்வி நடவ டிக்கை பாதிக்கப்படுவதுடன் போதைப்பொருள் பாவனையாளர் உடல், உள நிலையும் பாதிக்கப்படுகின்றன. 

போதைப் பொருள் பாவனையானது எமது சமுதாயத்தில் நடக்கும் சகல சமுதாய சீரழிவிற்கும் காரணமாகின்றது.சிறுவர்கள் போதைக்குள்ளாகும் சந்தர்ப்பங்களாக சிறுவயதிலிருந்தே விருப்பத்துடன் பார்த்த காட்டூன் மற்றும் சிறுவர் திரைப்படங்களிலும் இவ்வாறு சிகரெட் மற்றும் மதுபானப் பாவனை போன்ற ஏமாற்றும் காட்சிகளினால் சிறுவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். 

பணத்திற்காக திரைப்படங்களில் சிகரெட் புகைப்பவர்கள் அழகாக  இருந்தாலும் உண்மையான  வாழ்க்கை யில் போதைப்பொருள்களை பாவிப்பவர் உதடுகள் கறுத்து முகம் சுருங்கி வயது முதிர்ந்த தோற்றம் ஏற்பட்டிருக்கின்ற அதிகமான இளைஞர்கள் எமது நாட் டின் சிறைச்சாலையில் போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்களில் அவமதிக்கப்படுகின்றனர்.
தென்னிந்திய முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் மதுபானச்சாலைகளை மூடுவேன் என உறு தியளித்து தேர்தலில் வெற்றிபெற்ற எம்.ஜி.ஆர். மதுபானசாலைகளை மூடிய போது கிராமங்களில் 
கள்ளச் சாராயம் எனும் கசிப்பு மறைமுகமாக உற்பத்தி செய்தமையால் பல சமூகச் சீர்கேடுகளும் குடும்பக் குழப்பங்களும் ஏற்பட்டு மீண்டும் மதுபானசாலைகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சடிதி யயன போதைப்பொருள்ளை முற்றாக ஒழித்தால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்படலாம். எனவே சிறிது சிறிதாக போதைப் பொருள் களை ஒழிக்க பாடுபடுவோமாக.

ليست هناك تعليقات

Latest Articles