நாட்டின் 9 மாவட்டங்களில் நாளைய தினம் கடும் வெப்பத்துடனான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிக வெப்பத்துடனான வானி...
நாட்டின் 9 மாவட்டங்களில் நாளைய தினம் கடும் வெப்பத்துடனான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அதிக நீரை பருகுமாறும் நிழலான இடங்களில் தரித்திருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளை வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இது குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


ليست هناك تعليقات