Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மகிந்த - மைத்திரியின் அதி முக்கிய விக்கட்டும் இரவோடு.. இரவாக.. வீழ்ந்தது - Queen Lanka News

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட பியசேன கமக...

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட பியசேன கமகே தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இரவோடு.. இரவாக அறிவித்துள்ளார்.

மேலும், இந்த இராஜினாமா தொடர்பில் நாளை இரவு 9 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் பியசேன கமகே விளக்கமளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக இன்று நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இதன் பின்னர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவை தெரிவித்து சென்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்திருந்தனர்.

இந்நிலையிலேயே தமது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே கூறியுள்ளார்.

மைத்திரியின் அரசியலில் அதி முக்கியஸ்தராக பியசேன கமகே விளங்குகின்றமை குறிப்பிடத் தக்கது.


ليست هناك تعليقات

Latest Articles