கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாளை முன்னிட்டு பொதுமக்களின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி நடைபெற்று வருகின்றது! கிளிநொச்சி மாவட்...
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாளை முன்னிட்டு பொதுமக்களின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி நடைபெற்று வருகின்றது!
கிளிநொச்சி மாவட்ட பொதுமக்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27.11.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் பெரும் எழுச்சியாக நடைபெறவுள்ளது.
எனவே, கனகபுரம் பிரதேசத்தில் பல மாத காலமாக கவனிப்பாரற்று கிடக்கும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை துப்புரவு செய்து மாவீரர் நாள் ஏற்பாடுகளை செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன…
கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் பெரும் எழுச்சியுடன் நாடாத்த உங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கி எமது மாவீரர்ளுக்காக நாள்வரை இந்த சிரமதானப்பணியில் எம்மோடு இணையுங்கள் என அனைவருக்கும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழு மற்றும் ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
மாவீரர் நாள் மற்றும் பணி தொடர்பான தகவல்களுக்கு
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் எனும் வைபர் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
கீழுள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் அல்லது KMT என +94774498738 என்ற இலக்கத்திற்கு வைபர் செய்வதன் மூலம் இணைந்து கொள்ள முடியும்.
இந்த குழுவில் இலக்கங்களை ஏனைய உறுப்பினர்கள் பார்க்க முடியாது என்பதால் அச்சமின்றி அனைவரும் இணைந்து கொள்ள முடியும்!



ليست هناك تعليقات