Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பதவி தருகிறேன்! பணம் தருகிறேன்! என்னோடு வாருங்கள் என அழைப்பு விடுத்த மகிந்த?

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் காரனமாக புதிய பிரதமாராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கட்டவுடன் புதிய அரசாங்கத்தோடு வந்து இனைந்து கொண்டால் அம...



நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் காரனமாக புதிய பிரதமாராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கட்டவுடன் புதிய அரசாங்கத்தோடு வந்து இனைந்து கொண்டால் அமைச்சு பதவி தருவதாக தமக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே. கே.பியதாஸ தெரிவித்தார்.

04.11.2018.ஞாயிற்றுகிழமை ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக இடம் பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவிததார்.

இந்த ஆர்பாட்டதில் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டதோடு ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள புத்தபகவானுக்கு விஷேட பஜனைகளிலும் கலந்து கொண்டதன் பின்னரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

நாட்டில் இன்று திடிர் என பிரதமரை மாற்றி புதிய பிரதமராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை இந்த நாட்டின் ஜனாதிபதி நியமித்துள்ளார். ஆனால் மஹிந்த அணியினர் பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதற்காக என்னையும் அழைத்து கூறினார்கள். உங்களுக்கு அமைச்சிபதவி தருகிறேன் பெருந்தொகையான நிதி தருகின்றேன் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு ஆனால் நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் பாராளுமன்றத்திலே அனேகமான உறுப்பினர்கள் எங்களின் பக்கமே இருக்கிறார் ஆகையால் பாராளுமன்றம் கூடிய பிறகு ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பெரும்பான்மையை காட்டுவார். எனவும் தெரிவித்தார் ஆகவே நான் என்றுமே ஜக்கி தேசிய கட்சியினை விட்டு கட்சி தாவல் பழக்கம் எனக்கு கிடையாது அதுமட்டும் அல்ல அமைச்சி பதவிக்கு ஆசைபட்டு என்றுமே மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவு வழங்கபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Latest Articles