முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவருகிற பேரறிவ...
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவருகிற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்க வேண்டுமென நெடுநாட்களாக கோரிக்கை விடுத்துவருகின்றன பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும்.
இதனியிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டுமென தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது அமைச்சரவை. ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக அமைதி காத்துவருகிறார் ஆளுநர்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் காலம் தாழ்த்தும் நடவடிக்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் குறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த ரஜினி யார் அந்த 7 பேர்? எனக்கு அந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாது என பதிலளித்திருந்தார். ரஜினியின் இந்த பதில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது.
கட்சி தொடங்கி தமிழகத்தின் முதல்வராக முடிசூடிக்கொள்வேன் என்ற ரீதியில் பேசிவரும் ரஜினி, முன்னாள் பாரத பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் குறித்தும், அவர்களை விடுவிக்க பரிந்துரைத்த அமைச்சரவையின் செயல் குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என பதிலளிப்பது கேலிக்குரிய செயல் என ரஜினியை சமூக வலைத்தளங்களில் விமர்சித்துவருகின்றனர் நெட்டிசன்கள்.



ليست هناك تعليقات