Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மைத்திரிக்கு எதிராக தனித்து களமிறங்கிய தமிழர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்ததை எதிர்த்து இன்றைய தினம் இலங்கையின் மீயுயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பத்து மன...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்ததை எதிர்த்து இன்றைய தினம் இலங்கையின் மீயுயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பத்து மனுக்களில் ஒன்றாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன்கூலின் மனுவும் இடம்பிடித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நாடாளுமன்றம் கலைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டு வெளியிட்ட நிலையில் பல்வெறுதரப்பிலுமிருந்து எதிர்ப்புக்கள் கிழம்பின.

இதனையடுத்து குறித்த செயற்பாட்டிற்கு எதிராக இன்று பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகளும் சில கட்சிசாரா அமைப்புக்களும் மீயுயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தனர்.

குறித்த மனுக்கள்மீதான விசாரணைகள் பிரதம நீதியரசர் மற்றும் இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் உளிட்ட ஆயத்தின் முன்னிலையில் நடந்துவரும் நிலையில் அதுகுறித்த எதிர்பார்ப்புக்கள் வலுத்துள்ளன.

எவ்வாறாயினும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து மஹிந்த தேசப்பிரிய மற்றும் னளின் அபயசேகர ஆகியொர் வெளியேறிய நிலையில், ஆணைக்குழுவின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன்கூல் கையெழுத்திட மறுத்துள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம் ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.


No comments

Latest Articles