Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட பிரதான முக்கிய திட்டத்திற்கு வந்துள்ள ஆபத்து!

நல்லாட்சி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதான அபிவிருத்தி திட்டமான கம்பெரலிய திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்...


நல்லாட்சி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதான அபிவிருத்தி திட்டமான கம்பெரலிய திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் இந்த தீர்மானம் குறித்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த அரசாங்கத்தின் பிரதான அபிவிருத்தி திட்டமான கம்பெரலிய, வரவு செலவுத்திட்ட யோசனை ஊடாக செயற்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் மாத்திரம் செயற்படுத்தப்படும் என்றும் புதிய திட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. இது சம்பந்தமாக அமைச்சரவைக்கு யோசனை ஒன்றும் சமர்பிக்கப்பட உள்ளது.

No comments

Latest Articles