Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மோட்டர் சைக்களின் முன்சில்லில் சிக்குண்டு ஒருவர் பலி!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தவலந்தென்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்தோடு, மற்றுமொருவர் படுங்காயமடைந்துள்ளா...


கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தவலந்தென்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்தோடு, மற்றுமொருவர் படுங்காயமடைந்துள்ளார்.

நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து மாத்தளை சென்ற மோட்டர் சைக்கிள், தவலந்தென்ன, ஹெல்பொட தோட்டம் கடுகித்துல பகுதியில் வீதியை கடக்க முயற்சி செய்த பாதசாரதி மீது இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டர் சைக்களின் முன்சில்லில் சிக்குண்டு படுகாயமடைந்த நிலையில் பாதசாரதி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹெல்பொட, கடுகித்துல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 65 வயதான அ.சிவநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மோட்டார் வண்டியின் சாரதி படுகாயமமைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, அவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات

Latest Articles