Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணையும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரி.எம். டில்சான்,சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணையவுள்ளார் என்று அந்தக் கட்சியின்...



இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரி.எம். டில்சான்,சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணையவுள்ளார் என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், டில்சான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவார் என்றும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் பதவி செல்லக் கூடாது என்ற தீர்மானத்தில் நாடாளுமன்றைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ليست هناك تعليقات

Latest Articles