Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கிளிநொச்சி யுவதி ஒருவர் முல்லைத்தீவில் தற்கொலை முயற்ச்சி

கிளிநொச்சி பூநகரியினை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வீதியில் அமைந்துள்ள வெள்ளமலை காட்டிற்குள் தற்கொலை முயற்சிய...



கிளிநொச்சி பூநகரியினை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வீதியில் அமைந்துள்ள வெள்ளமலை காட்டிற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 13.11.18 இன்று மாலை வெள்ளமலை காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று கிடைப்பதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்ற பொலீசார் யுவதி ஒருவர் கையில் வெட்டுப்பட்டு மயங்கிய நிலையில் காணப்பட்டநிலையில் அவரை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இடதுகையின் மணிக்கட்டு பகுதியில் சிறு வெட்டு காயத்திற்கு உள்ளான நிலையில் அருகில் கடிதம் ஒன்றும் காணப்பட்டுள்ளது. அதில் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் இதற்கு யாரும் பொறுப்பில்லை என்றும் எழுதப்பட்டுள்ள துண்டு ஒன்றினையும் பொலீசார் மீட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து யுவதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார் குறித்த யுவதியிடம் பொலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது எந்த தகவலும் வெளியிடாத நிலையில் குறித்த யுவதியின் தொலைபேசியில் இருந்து இறுதியாக அழைப்பு கிடைத்த இலக்கத்திற்கு தொடர்புகொண்ட பொலீசார் அவரின் பெற்றோர்களை இனம் கண்டு அவரின் நிலமை குறித்து தெரிவித்துள்ளார். மட்டுவில் மேற்கு பூநகரியினை சேர்ந்த 24 அகவையுடைய குறித்த யுவதி 12.11.18 அன்று வீட்டினை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

No comments

Latest Articles