Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

"ஆபத்தில் உதவுவோம்" கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி உதவியுள்ளனர்....





கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி உதவியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகும் பெய்து வரும் மழையினால் கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் மட்டக்களப்பு மாவடத்தில் பல இடங்களிலிருந்தும் மக்கள் இடம்பெயர்ந்தும் இருக்கின்றனர். இவ்வாறு மட்டக்ககளப்புல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரிலும் ஏனைய இடங்களிலும் சேகரிக்கப்பட்ட உலருணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Latest Articles