Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

காஜா புயல் - போஜா புயல் இதுக்கெல்லாம் பெயர் வைக்கிறது யாருங்க!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதமின்றி கடந்திருக்கிறது கஜா. சரி புயலுக்கு ஏன் பெயர் வைக்கிறாங்க யார் வைக்கிறாங்கன்னு கேட்டா பெரும்ப...

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதமின்றி கடந்திருக்கிறது கஜா. சரி புயலுக்கு ஏன் பெயர் வைக்கிறாங்க யார் வைக்கிறாங்கன்னு கேட்டா பெரும்பாலும் தெரியாது என்பதே முதல் பதில்.

புயலுக்கு பெயர் வைக்கும் முறையின் பின்னனி. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு மேலாண்மை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வானியல் ஆய்வாளர்கள், மாலுமிகள், பொது மக்கள் மேற்கொள்ளவும் சரியாக புரிந்து செயல்படவும் புயலின் பெயர்கள் உதவும். 

புயலுக்கு பெயர் வைக்கும் பழக்கம் ஏற்கறவே பல மேலை நாடுகளில் இருக்கிறது. புயல்களை இனம் கண்டு கொள்ள எளிதாக இருப்பதற்காகவே இந்த நடைமுறை. முன்பு புயல் கரையை கடக்கும் ஊரின் பெயர் புயலுக்கு சூட்டப்பட்டு வந்தது. 

சில சமயம் ஒரே ஊரில் 2 புயல்கள் வரும், அதே போல் சில நாடுகளில் ஒரே சமயத்தில் 3 புயல்கள் ஒன்றாக வரும். அப்போது அவற்றை வகை படுத்துவது கடினம். இந்த சிக்கலை போக்கவே பெயர் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2004 ம் ஆண்டு சார்க் அமைப்பில் இருக்கும் 8 நாடுகள் இணைந்து புயல் பெயர்களை வழங்கின. 

இந்த பெயர்கள் வங்கக்கடல், அரபிக்கடலில் ஏற்படும் புயல்களுக்கு சூட்டப்படும். ஒரு நாடு 8 பெயர்களை வழங்க வேண்டும். புயலின் பெயர் சிறியதாக எளிதில் புரியும்படி இருக்க வேண்டும். அதேபோல் எந்த மத இன நாட்டு பிரிவினரையும் புண்படுத்தும் வகையில் இருக்க கூடாது. 

நம் நாட்டு மொழியிலிருக்கும் பெயர் பிற நாட்டு மொழியில் மோசமான அர்த்தம் தந்தால் அப்பெயர் நிராகரிக்கப்படும். இந்திய சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட எட்டு பெயரும் பஞ்ச பூதங்களை குறிப்பவை. (அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு). 

இதே போல் மற்ற 7 நாடுகளும் பெயர்களை வழங்கியுள்ளன. அதில் தற்போது வைக்கப்பட்டுள்ள கஜா தாய்லாந்து நாடு வழங்கிய பெயர்.


ليست هناك تعليقات

Latest Articles