சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கொழும்பு வி...
சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பு விஜேராம வீதியிலுள்ள பிரதமரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்வைத்தே அவர் இந்த அங்கத்துவத்தினைப் பெற்றுக்கொண்டார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் சனவரி 5ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில் மைத்திரி மஹிந்த அணிகள் இணைந்து பொதுக் கூட்டணி ஒன்றை உருவாக்கவுளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவே போட்டிடுவார் என்றும் தெரியவந்துள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கோட்டை என வர்ணிக்கப்படும் கொழும்பில் ரணிலை எதிர்த்து மஹிந்தவே களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இதனால் ரணிலுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடக்கவுள்ள நேரடி மோதலாகவே எதிர்வரும் தேர்தல் அமையப்போவதாக அரசியல் அவதானிகள் கூறிகின்றனர்.



No comments