Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

துப்பாக்கி சுடுதல் : 4 வது தங்கம் வென்றார் 'சவுரப் சௌத்ரி'!

ஆசிய துப்பாக்சி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சௌத்ரி, தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய துப்பாக்கி சுடுத...


ஆசிய துப்பாக்சி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சௌத்ரி, தங்கம் வென்று அசத்தியுள்ளார்.


ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் குவைத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டியில், இந்திய இளம் வீரர்கள் கலந்து கொண்டார். 


அதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சவுரப் சௌத்ரி, 239.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன்(237.7 புள்ளி) இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். மூன்றாவது இடத்தை சீன வீரர் ஹூவாங் பிடித்து வெண்கலம் வென்றார்.

இந்திய வீரர் அன்மோல்(195.1) நான்காம் இடம் பிடிக்க நேரிட்டதால், இந்திய வீரர்கள் உலக சாதனையை நூழிலையில் தவற விட்டனர்.

சவுரப் சௌத்ரி இந்த வருடம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டி, உலக துப்பாக்கி சுடுதல், மற்றும் சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் மொத்தமாக மூன்று தங்கம் பெற்றிருந்தார். 

இந்த வெற்றியின் மூலம் அவர் 4 வது தங்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles