Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பட்டப்பகலில் நடு வீதியில் வைத்து தலை துண்டிப்பு! தலைதெறிக்க ஓடிய மக்கள்!

ஜாமீனில் இருந்து வெளியே வந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியுள்ளது. பட்டப்பகலில் பட்டுக்கோட்டையில்...




ஜாமீனில் இருந்து வெளியே வந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியுள்ளது. பட்டப்பகலில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுகோட்டையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி சாந்தாங்காடு கிராமத்தை சேர்ந்த சம்பான் கார்த்தி என்பவரை அடித்து கொலை செய்துள்ளார்.

இந்த கொலையில் மேலும் 6 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனாலும் இதில் பிரதான குற்றவாளி பிரகாஷ்தான். அதனால் 7 பேருமே கைது செய்யப்பட்டு, தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அதனால் தினமும் பட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட்டுவிட்டு வர வேண்டும். அதன்படியே 7 பேரும் சென்று கையெழுத்து போட்டு வருகின்றனர்.

அப்படித்தான் இன்றும் கையெழுத்து போட 7 பேரும் 4 மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். கையெழுத்தும் போட்டுவிட்டு வீட்டுக்கு மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் அவர்கள் வந்தபோது, அவர்களுக்கு பின்னாடியே 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் இவர்கள் 7 பேரின் பைக்குககளை வழிமறித்துள்ளது.

அச்சம் அடைந்த அவர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். ஆனாலும் மர்மகும்பல் அவர்களை விடவே இல்லை. தொடர்ந்து விரட்டியது. எல்லோரும் உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பித்து ஓட, முக்கிய குற்றவாளியான பிரகாஷ் என்பவர் மட்டும் சிக்கி கொண்டார்.

அவரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. அவரது தலையை தனியாக துண்டித்து எடுத்து தஞ்சாவூர் சாலையில் போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது.

இது எல்லாமே இன்று மதியம் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடுரோட்டில் நடந்தது. இதை பார்த்த மக்களும் சிதறி ஓடினார்கள். அதில் ஒருசிலர் பொலிசாருக்கு தகவல் வழங்க, அவர்களும் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Latest Articles