Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இலங்கையில் ஆட்சிமாற்றம்! மகிந்த பிரதமரானார்.

சிறிலங்காவின் தேசியஅரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகியதையடுத்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது இ...



சிறிலங்காவின் தேசியஅரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகியதையடுத்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இன்று முன்னாள் அரசதலைவா மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளார்.

சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அந்தப் பதவியில் இருந்து அகற்றவிட்டு தற்காக மஹிந்தவை நியமிப்பது தொடர்பில் சிறிலங்காவின் தற்போதைய அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கும் – மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் கடந்த சில வாரங்களாக ரகசிய பேச்சுக்கள் இடம்பெற்றுவந்த நிலையிலேயே இந்தப் பதவிப் பிரமாணம் இடம்பெற்றிருக்கின்றது.

கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு இன்றைய தினம் சென்றிருந்த முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சஇ சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவுடன் நீண்ட நேர கலந்துரையாடலை நடத்திய நிலையில் சற்று நேரத்திற்கு முன்னதாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டிருக்கின்றார்.

இதேவேளை இந்த சம்பவத்திற்கு முன்னதாக சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அதன் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவித்துள்ளார்.

No comments

Latest Articles