Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமியாரும், மைத்துனரும் வைத்தியசாலையில் அனுமதி.

   யாழ்.சாவகச்சோி - மீசாலை கிழக்கு பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமியாரும், மைத்துனரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அ...

   யாழ்.சாவகச்சோி - மீசாலை கிழக்கு பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமியாரும், மைத்துனரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில் ,

காணித் தகராறு காரணமாக 46 வயதான மாமியார் மற்றும் 14 வயதான மைத்துனர் ஆகியோரை குறித்த சந்தேக நபர் கடுமையாக தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் மாமியார் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments

Latest Articles