ராஜஸ்தான் எல்லையில் உள்ள பனஸ்கந்தா என்ற பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு கொரோனா என்ற உணவு விடுதி திறக்கப்பட்டது. இந்த செய்திதான் தற்போது சமூக...
இந்த செய்திதான் தற்போது சமூகவலைத்தளங்களில் குஜராத்திற்கு 2015ம் ஆண்டே கொரோனா வந்துவிட்டதாக பரப்பி வருகின்றனர்.
இந்த லாக்டவுண் நேரத்தில் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அந்த ஓட்டலுக்கு முன்னே நின்று போட்டோ எடுத்து செல்கின்றனர். அப்பகுதியில் உள்ள பர்கத் பாய் என்பவர் தான் அப்பகுதியில் கடையை நடத்தி வருகிறார்.
அவரிடம் பத்திரிக்கையாளர்கள் இந்த கடைக்கு ஏன் இப்படி பெயர் வைத்தீர்கள் என கேட்ட போது அவர் உருது மொழியில் கொரோனா என்றால் கேலக்ஸி என அர்த்தம் அதன் அடிப்படியில் தான் இப்படி பெயர் வைத்தோம் என தெரிவித்துள்ளார்.
தற்போது ராஜஸ்தானிலிருந்து பாலி நோக்கி செல்பவர்கள் இந்த ஓட்டலின் பெயரை பார்த்து ஒரு நிமிடம் நின்று புகைப்படம் எடுத்துவிட்டு செல்கின்றனர்.



ليست هناك تعليقات