Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

புலம்பெயர் தேசத்து தமிழா சற்றே கிழக்கை திரும்பி பார்

புலம்பெயர் தேசத்து வெளிநாட்டு உறவுகளே மட்டக்களப்பில் தமிழனாக முதலீடு செய்து மட்டக்களப்பு தமிழரின் மானம் காக்க முன்வாருங்கள். நீங்கள் காலம் ...

புலம்பெயர் தேசத்து வெளிநாட்டு உறவுகளே மட்டக்களப்பில் தமிழனாக முதலீடு செய்து மட்டக்களப்பு தமிழரின் மானம் காக்க முன்வாருங்கள். நீங்கள் காலம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடிகளும் மட்டக்களப்பின் பொருளாதாரம் தொடக்கம் நிலப்பரப்பு வரை மாற்றான் கைகளுக்கு சென்று கொண்டு இருக்கிறது.

இது தாங்கள் அறிந்து இருப்பது குறைவு மட்டக்களப்பு மண்ணோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்கள் உறவுகளோடு உரையாடி பருங்கள்.அவர்களின் வலி தெரியும் ஆதங்கம் தெரியும்.போராடியும் வலியோடும் தோற்று போனதாக இருக்க கூடாது.நீங்கள் வாழும் வாழ்க்கையில் 50%தத்தையாவது அவர்களுக்கு தொழிற்சாலை மூலம் முன்னேற வழி கொடுங்கள்.

என்னைப் போன்ற கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு தமிழ் இளைஞர்களும் ஆதங்கங்கள் நிறைய உள்ளது.தனது ஊர் இவ்வாறு அமைய வேண்டும் என்று.ஆனால் அவைகள் நிறைவேறாமல் இருந்து மனம் சோர்ந்து கிடக்கின்றனர்.புலம்பெயர் தேசத்து தமிழா சற்றே கிழக்கை திரும்பி பார்.உன் உறவுகளின் உடைமைகள் பரிபோவதை. அன்று தமிழன் போராடி தோற்று போனான். ஆனால் இன்று கூடவே இருக்கும் இனத்தின் சதித்திட்டத்தால் ஏமாற்றப்பட்டு கொண்டு இருக்கிறனர். உன் முயற்சியால் எத்தனை குடும்பங்கள் வாழ்க்கை சிறப்பித்திடும்.எத்தனை குடும்பத்தின் வறுமை போக்கப்படும்.

நம்பிக்கையோடு முன் வா.உன்னை வழி நடத்த எம் கிழக்கு இளைஞர்கள் உள்ளனர்.நானும் கை கோர்ப்பேன்.தமிழினம் இனி தோற்று போனதாக சரித்திரம் இருக்க கூடாது.அதற்கு உன் முதலீடு கை கொடுக்கடும்.புலம்பெயர் தேசத்து தமிழரிடம் கிழக்கு தமிழனாய் நான் எதிர்பார்ப்பது.

*சிறந்த முதலீட்டினை மட்டக்களப்பில் செய்ய வேண்டும்.

*புதிய ஆடையங்கள் தொடக்கம் சாப்பாட்டு கடைகள் வரை புதிய கடைகளை உருவாக்கு.

*தமிழரின் சொத்துக்களை காணிகளை நீ வாங்கி உன் சந்ததிக்கு உதவிட வழி சமைத்திடு.

*வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை கொடு.

*கல்வி கற்று வேலை தேடும் இளைஞர்களுக்கு தொழில் கொடு.

*கிழக்கு மாகாண மண்ணையும் பெண்ணையும் காக்க உன்னை தயார் செய்திடு.

*நீ பிறந்து வளந்த மண்ணை நேசிக்க உன் முதலீடை அங்கே செய்திடு.

*பாரிய தொழில் பேட்டைகளை உன் மண்ணில் நிறுவ வழிசமைத்திடு.

*கிழக்கு தமிழரின் வறுமை பசி கஸ்ட்டம் போக்க உன் பொருளாதார முதலீட்டை கிழக்கில் செய்.


ليست هناك تعليقات

Latest Articles