Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

எம் குல பெண்களுக்கு நீங்கள் கற்று தர தேவையில்லை - பெண்ணியமும் சமத்துவமும்

நீங்கள் வந்து பெண்ணியம் பெரியாரிசம் கற்றுக் கொடுக்குமளவிற்கு எமது பெண்கள் ஒன்றும் தரம் தாழ்ந்து விடவும் இல்லை தாழ்ந்து விட நாம் அனுமதிக்கப்...

நீங்கள் வந்து பெண்ணியம் பெரியாரிசம் கற்றுக் கொடுக்குமளவிற்கு எமது பெண்கள் ஒன்றும் தரம் தாழ்ந்து விடவும் இல்லை தாழ்ந்து விட நாம் அனுமதிக்கப் போவதுமில்லை.

வீரத்தின் அடையாளம் எங்கள் பெண்கள் அதில் குளிர்காய்ந்த உங்களுக்கு எமக்கு வந்து சமத்துவம் பெண்ணியம் கற்பிக்க எந்தத் தகுதியும் இல்லை.

ஈழப்பெண்களுக்கு பாடம் எடுக்கும் நிலைக்கு எவரையும் நாம் அனுமதிக்க தயாராகவும் இல்லை அனுமதிக்க போவதுமில்லை.

சுற்றுலா பயணிகளாக பார்வையாளர்களாக பலர் எமது தேசத்திற்குள் வருகின்றீர்கள் வரவேண்டாம் என்று சொல்லவில்லை தாராளமாக வாருங்கள் எங்களை அழித்தவர்கள் காட்டிக்கொடுத்தவர்கள் எல்லோருடனும் கைலாகு கொடுத்து அளாவளாவி புகைப்படங்கள் எடுத்து பதிவேற்றுங்கள் அது உங்கள் உரிமை அதனை யாரும் தடுக்க போவதில்லை.

ஆனால் எம் ஈழப் பெண்களுக்கு அறிவுரை கூறுமளவிற்கு இந்த உலகத்தில் எவருக்கும் தகுதியில்லை. விடுதலைப் புலிகள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவில்லை என்று கூறுகின்றீர்களே! 

உலகிலேயே ஆண்களுக்கு நிகராக இராணுவம் காவல் துறை நீதி நிர்வாகத்துறை என்று அனைத்திலும் தடம் பதித்து தேசியத் தலைவனுக்கு தோள் கொடுத்தவர்கள் எம் தேசத்து பெண் தெய்வங்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? 

அறிந்திருக்க வாய்ப்பே இல்லை மதுக்குவளைகளுடன் பப் இல் நடனமாடுவார்கள் இதெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பே இல்லைத்தான்.

நீங்கள் வந்து பார்வையிட்டு உங்கள் எண்ணங்களை மேற்கத்தேய மோகங்களை திணித்துவிட்டுச் செல்ல ஈழத்தமிழர் ஒன்றும் பரதேசிகள் இல்லை.

எங்களை விற்கும் ஓரு சில கைக்கூலிகள்தான் வால்பிடித்து வட்டமேசையில் இருத்தி வைத்து மாநாடு நடத்துங்கள்.

ஆனால் தன்மானமுள்ள ஒவ்வொரு ஈழத் தமிழனும் கஞ்சியை குடித்தாலும் தன்மானத்தோடும் சுயகௌரவத்தோடும் வாழ்பவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

கழுத்தில் தாலிக்கு பதில் நஞ்சுக்கொடியும் கையில் பிள்ளைக்கு பதில் பேராயுதமும் ஏந்தி சமராடியவர்கள் எம்தேச பெண்கள்.

#மறந்து_விடாதீர்கள் #எமது_தியாகங்களை
#அழித்து_விடலாம்_என_நினைக்காதீர்கள் #எமது_வரலாற்றினை





ليست هناك تعليقات

Latest Articles