Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சற்றுமுன் உயர் நீதிமன்றத்தில் நடந்த சம்பவம்; கலக்கத்தில் மஹிந்த-மைத்திரி!

சிறிலங்கா அரச தலைவரின் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக சற்று முன்னர் பத்துத் தரப்புக்கள் உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளத...



சிறிலங்கா அரச தலைவரின் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக சற்று முன்னர் பத்துத் தரப்புக்கள் உயர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக எமது கொழும்புச் செய்தியாளர் கூறுகின்றார்.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட்ட பத்து தரப்புக்களே இவ்வாறு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றைக் கலைத்த மைத்திரிபால சிறிசேன அதுதொடர்பான விளக்கத்தை நேற்றைய தினம் நாடு மக்களுடன் பேசும்போது கொடுத்திருந்தார்.

எவ்வாறாயினும் ஏற்கனவே கூறப்பட்டதன்படி நாடாளுமன்றத்தில் அங்கம்வகித்த கட்சிகள் உட்பட பத்துத் தரப்புக்கள் சற்றுமுன் இந்த மனுத்தாகலைச் செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles